சர்க்கரையை கட்டுப்படுத்த ஆவாரம்பூ
சர்க்கரையை கட்டுப்படுத்த ஆவாரம்பூ
ஆவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து, ஆவாரை பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
சகல நோய் நிவாரணி ஆவாரை பஞ்சாங்கத் தை, தினம் ஒரு மேஜை கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு, வெந்நீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நா வறட்சி, உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் ஆகிய பிரச்னை
களுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ என்ற பழமொழியில், இருந்து ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால், நாற்றம் நீங்கும்; உடல் பொன்நிறமாகும்.
ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.
ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்
பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
No comments