ஆவாரம் பூ மருத்துவ குணம்
ஆவாரம் பூ மருத்துவ குணம்
நாம் நம்மிடம் இருக்கும் அருமையானஎளிமையான இயற்கை மருந்துபொருட்களை புறம்தள்ளி பக்கத்துமாநிலத்துக்காரன் அதையேஆயுர்வேதா கேம்ப் என்ற பெயரிலும்நம்ம ஊரிலேயே சில பத்திரிகைபரம்பரை வைத்தியரிடமும் போய்காசைக்கரியாக்குகிறோம்,
இந்த ஆவாரம் பூ மருத்துவ இயல்புமனித மரபணுக்களுடன் இணைந்துகாலம் காலம்மாக நமக்குபலனளிக்கும் தாவர வகைகளுள்ஒன்றும் இது பலருக்கு தெரியாது. சாதரணமான உதாரணம்அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களைதாக்கி பரம்பரை பரம்பரையாகநோயை உண்டாக்குகிறது, இந்தஆவரம்பூ மரபணுக்களை தாக்கும்கதிரியக்கத்தை தாக்கும் பொருளாகஇருக்கிறது, புற்று நோய் தாக்கும்செல்களை கட்டுப்படுத்தும் திறன்மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில்சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும்ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்கசக்திகளை தடுத்து அவற்றைமீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல்கொண்டது, இதன் மெல்லியஇலைகளின் மேல் சிலிக்கா படலமும்இந்த பூக்களின் நிறமியும் இந்தபணியை அற்புதமாக செய்யஇயற்கை நமக்கு தந்துள்ளது.
இதை பார்த்து விட்டு செல்பவர் பலர்கூறலாம் இது மிகைப்படுத்தப்பட்டஅல்லது ஓவர் டோஸ் கற்பனை என்றுநினைக்கலாம்
(ஆவாரம் பூ கேன்சரைகுணப்படுத்துமா அதற்கு என்னஆதாரம் என்றால் உலகில் பலநாடுகளில் உள்ள புற்று நோய்கழகத்தின் லோகோவில் உள்ள பூஇந்த கேசியா அரிக்குலடா என்றஆவாரம் பூ தான்( Canadian Cancer Society Logo) இந்த நாட்டு புற்று நோய்கழக லோகோவில் ஆவாரம் பூ இதழ்மையத்தில் வெள்ளை நிறம்இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்தஅடையாளம், ஆனால் கனடாவில்காணப்படும் கேசியா அறிக்குலாட்டாவை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம்மிக்கது, இனியாவது வாசலின் மேலேபாட்டி சொருகி வைத்த ஆவரம்பூகொத்தை காய்ந்த சருகு எனவீசாதீர்கள்
1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.
2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகியஅனைத்தும் மருத்துவப்பயனுடையவை.
5. வளரியல்பு -: ஆவாரைதமிழகமெங்கும் அனைத்துவகைநிலங்களும் ஏற்றவை. எல்லாஇடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும்பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள்நிறப் பூக்களையுடைய அழகியகுறுஞ்செடி,
மெல்லிய தட்டையானகாய்களையுடையது. இதன் பட்டைத்தோல் பதனிடப் பயன் படுகிறது. இதுஒரு வருடப் பயிர். வேர்எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில்உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடிபயிரிட முதலில் நிலத்தை நன்றாகஉழுது உரமிட்டு நீள் பாத்திகள்அமைக்க வேண்டும்.
ஆவாரை விதைகளை நேரடி விதைப்பெனில் 15 கிலோவும், நாற்றங்கால்என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள்பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடிஇடைவெளியில் நட வேண்டும். பயிர்தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்குஒரு முறை தண்ணீர் பாயச்சவேண்டும். நான்கு மாதங்களுக்குஒரு முறை இலைகளைப் பறிக்கலாம்.
ஒரு வருடத்தில் 2000 கிலோஇலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும்500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப்படுத்த நிழலில் 5 நாட்கள்உலரவைக்க வேண்டும்இலைப்புள்ளி, இலைச்சுருட்டுநோய்கள் வராமல் இருக்க மருந்துக்கொல்லியைப் பயன் படுத்தவேண்டும். செலவு ஒரு வருடத்திற்குரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு60,000 ஆக வருமானம் ரூ.48,000இவை தோராயமானவை.
6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரைசதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும்தன்மையுடையது. விதை காமம்பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப்போக்குவதுடன் நிறமூட்டும்.
இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும்கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோஆல்கஹால்களும் சாமோடிக்கும்உள்ளன. இது தவிர கொரடென்சிடின்மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.
ஆவாரை செடியானது சர்வ பிர மேகமூத்திர ரோகங்களையும் ஆண்குறிஎரிவந்தத்தையும் குணமாக்கும்.
முறை -: அரைப்பலம் ஆவாரம்பட்டையை நன்றாய் இடித்து ஒருமட்கலயத்தில் போட்டு அரைப்படி நீர்விட்டு அடுப்பில் வைத்து சிறுகஎரித்து வீசம் படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மதுமேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதரசரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும்கொடுப்பதுண்டு.
பூச்சூரண்த்தையோ, பூவைக்குடிநீராக்கிப் பாலில் கலந்தோ,இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள்தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில்உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம்நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.
ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலைவெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல்மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும்வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.
ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒருமிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத்தைலம்) காய்ச்சி, தலை முழுகிமதுமேகம் உடையவருக்கு காணும்தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில்குணமாகும்.
20 கிராம் பட்டையைப் பொடித்து ஒருலிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக்காய்ச்சி 50 மி.லி. காலை, மாலைகுடித்து வர மதுமேகம், சிறுநீருடன்இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்
No comments