வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Breaking News

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா? அப்படிக் குடித்தால்....?

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும் போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதே போல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக் கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட் (விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை!.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தது மூன்று லிட்டர் அளவுக்காவது தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் இதைக் காட்டிலும் அதிகமாகத் தண்ணீர் குடிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. அது அவரவர் உடல் வாகை பொருத்த விஷயம். மூன்று லிட்டருக்கு குறைவாக தண்ணீர் குடித்தால் தான் பிரச்சனை. உடலில் உப்பு வெளியேறாது. அதனால் பல வியாதிகளுக்கு நாமே அழைப்பு விடுக்கிறோம் என்பது போல ஆகி விடும்.

சரி தண்ணீர் குடிக்கும் போது, கவனிக்க வேண்டியது....

மொத்தமாக ஒரு லிட்டர் தண்ணீரையும் ஒரே வேளையில் குடிப்பது நல்லது அல்ல. உடனுக்குடன் அத்தனை தண்ணீரும் சிறுநீரில் வெளிவந்து விடும். இதனால் உடலுக்கு நல்லது அல்ல. சிறுநீரகத்துக்கு தான் அதிக பளுவை தரும். இதனைத் தவிர்க்க, ஒரு லிட்டர் தண்ணீரை பகிர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் உடலில் போதுமான அளவு தண்ணீர் சேரும். இப்படியாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குடி தண்ணீரை சரியான அளவில் குடித்து வந்தால் அதை விட சிறந்த அமிர்தம் உடலுக்கு வேறு என்ன?

No comments