வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Breaking News

தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்

தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் :

1 திருமால் மார்பு

2 பசுவின் பின்புறம்

3 யானையின் மத்தகம்

4 தாமரை

5 திருவிளக்கு

6 சந்தனம்

7 தாம்பூலம்(வெற்றிலை )

8 கோமயம்

9 கன்னிப்பெண்கள்

10 உள்ளங்கை

11 பசுமாட்டின் கால்தூசு

12 வேள்விப்புகை

13 சங்கு

14 வில்வமரம்

15 நெல்லி மரம்

16 தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்

17 வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18 கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19 தானியக் குவியல்

20 கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

21 பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்கள்

22 பகிர்ந்துண்டு வாழும் மனிதர்கள்

23 நாவடக்கம் உள்ளவர்கள்

24 மிதமாக உண்பவர்கள்

25 பெண்களைத் தெய்வமாக நடத்தும் குடும்பம்கள்

26 தூய்மையான ஆடை அணிகிறவர்கள்

மேற்கண்ட இவை அனைத்துமே மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் தான். காலையில் எழுந்தவுடன் மேற்கண்டவற்றை பார்த்து எழுவது நல்லது.

மேலும்

பெண்கள் நிறைய ஜொலிக்கும் வளையல்களை அணிந்து கொள்வது,

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மோதிர விரலால் சிவப்பு நிற குங்குமம் இடுவது,

கணவனுக்கு கால்களை பிடித்து விடுவது,

இரவு உடுத்திய உடையுடன் காலை வீட்டின் படிகளை தாண்டி வெளியே செல்லாமல் குளித்து விட்டு செல்வது,

அன்னத்தை இடது கைகளால் பரிமாறாமல் இருப்பது ,

இடது கைகளால் செல்வத்தை பெறுவது ,தருவது போன்ற செயல்கள் செய்யாமல் தவிர்ப்பது ,

ஒற்றை கால்களில் நிற்காமல் இருப்பது ,

கோவில்களில் அமர்ந்து தாலி கயிற்றை மாற்றி கொள்வது /திருத்தி கொள்வது,

அழுக்கான உடைகளை அணிவதை தவிர்ப்பது போன்ற செயல்கள் செல்வ வளத்தை பெண்களுக்கு தரும்.

ஆண்களுக்கு

பெண்களை துன்புருத்தி அல்லது வேதனை படுத்தி கண்களில் நீர் வரவைப்பது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது,

செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடாமல் இருப்பது ,

மல்லிகை (வாசமான ) மலர்களை மனைவிக்கு அணிவிப்பது,

பகலில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது ,

வெட்ட வெளியில் உறவு கொள்ளாமல் இருப்பது ,

பண இருப்பை உடலின் முன்பக்கத்தில் (தொடை ,மார்பகம் ) வைத்துக் கொள்வது,

இவைகளையெல்லாம் ஆண்கள் பின்பற்றும் பொழுது மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

அனைவரும் இதனை பின்பற்றி லட்சுமி தேவியின் ஆசிகளை பெற்று மேன்மை பெறுவோமாக.

No comments