வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Breaking News

படைத்தவனையே பதற வைத்த பரமரகசியம்

படைத்தவனையே பதற வைத்த பரமரகசியம்..?

300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயனுக்கு தெரிந்ததை, 3600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் அறிந்தது..? இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்பது அனைவருக்கும் தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும்? இப்படி வட மேற்கில் மறைகிறதே? உங்கள் அனைவருக்கும் தெரியும், உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார். பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர். ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர். அன்றே தெள்ள தெளிவாக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என 360° கோணத்தில் சரியாக 23.5° கணக்கிட்டு கட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த படம் கூட கோணலாக இருக்கலாம். ஆனால் குலசேகர பாண்டியன் கட்ட ஆரம்பித்த இந்த கோவிலில் எந்த கோணலும் இருக்காது. பாருங்கள் சூரியன் சரியாக மேற்கிலிருந்து 23.5° டிகிரி சாய்வாகவே மறைகிறது. 300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயனுக்கு தெரிந்த விஞ்ஞானத்தை 3600 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர் தமிழர்கள். கோவிலை கட்ட நிர்மாணித்த குலசேகர பாண்டியன், கிழக்கு கோபுரத்தையும் மேற்கு கோபுரத்தையும் நேர் கோட்டில் கட்டிய சுந்தரபாண்டியன் மற்றும் பராக்கிரம பாண்டியன் ஆகியோரது இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. .

No comments