வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Breaking News

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக் கல்

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது)[ கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கும் இக்கருங்கல் உருண்டை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை அருகே சிறு குன்றின் மீது 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் 250 டன் எடையும் கொண்டு, குன்றின் சரிவில் நான்கடி பரப்பளவில் 1,200 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.
இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பாணையிலிருந்த வெண்ணெயை திருடித் தின்ற செயலை நினைவு கூறும் வகையில் இக்கல் உருண்டைக்கு கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படுகிறது.]
பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1908-இல் சென்னை மாகாணத்தின் ஆளுநாராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்தில் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யாணைகளின் உதவியால் குன்றுலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சியும் வெற்றி பெற வில்லை.

No comments