திருநீறு பூசினால் நோய் வராது
*திருநீறு பூசினால் நோய் வராது*.
எமது ஆசானின் வாக்கும் - அடியேனின் அனுபவத்தாலும் இக்கருத்தை பரிமாற்றிக் கொள்கிறேன்..
இன்றைய காலகட்டத்தில் புதியது புதியதாக நோய் உருவாகிறது.
குறிப்பாக இப்பொழுது டெங்கு காய்ச்சல்..
இந்நோயினால் பல பேர் குறிப்பாக தமிழகத்தில் அநேக பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனையில் இருந்து வந்த தகவல் - நாளிதழ் - ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளது.
இதற்கு தீர்வு நிலவேம்பு கசாயம் என்றாலும் நிரந்தரமாக குணமாவதற்கும் இனிமேல் எந்த நோயும் நம்மை அண்டாமல் (வராமல்) இருப்பதற்கு ஒரு வழி உள்ளது..
*அது தான் நெற்றி முழுவதும் திருநீறு பூசுவது*
திருநீறு பூசினால் நோய் வராதா?
இதற்கு சான்று தர முடியுமா?
கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பெருமான் திருஆலவாய் என்கிற தற்போதையில் மதுரையில் அருளிய பதிகமான
*"மந்திரமாவது நீறு என்கிற திருநீற்று பதிக பாடலை பாடி மதுரையை ஆண்ட கூண்பாண்டித் தேவனின் கூனை நிமிர்த்தினார்.. மேலும் திருநீற்றினை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசினால் தீப்பிணிகள் ஆயின தீரும் என்கிறார்*
*திருநீற்று பதிகத்தில் இருந்து*
*வெந்துயர் தீர்ப்பது நீறு*
*புன்மை தவிர்ப்பது நீறு*
*அவலம் அறுப்பது நீறு*
*வருத்தம் தணிப்பது நீறு*
*ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு*
மேலும் திருநீற்று பதிகத்தில் காண்க.
*மற்றொரு நடப்பு ஆதாரமாக*
*சிவாச்சார்யார்கள், ஓதுவார்கள் , சைவநெறியில் தனது குருநாதரிடம் முறையாக சமய தீட்சை பெற்று பதினாறு இடங்களில் திருநீறு பூசும் சிவ அன்பர்களுக்கு ஒரு நாள் கூட மருத்துவமனைக்கு சென்றதில்லை என்பது சான்றாக உள்ளது.*
*பழமொழி ஆதாரம்:*
*நீறு இட்டு யார் கெட்டார்*
*பதினெட்டு சித்தரில் ஒருவரான திருமூலர் அருளிய நூலான திருமந்திரத்தில் 1666 ஆவது பாடலில்*
*"கங்காளன் பூசும் கவச திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே..*
*பெரியபுராணத்தில் ஆதாரம்*
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென என்றார் அப்பர் பெருமான்..
திருநீற்றை பூசினால் நமக்கு பெருவாழ்வு
வரும்.
*அறிவியல் ஆதாரம்:*
திருநீற்றினை தண்ணீரில் குழைத்து பூசுவதால் மூட்டு வலி வருவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்..
*முன்பு சிக்கன் குன்னியா (SIKKAN BOX) என்கிற கிருமி* ஒரு சில மக்களிடம் பரவியது.
ஆனால் திரு நீறு பூசும் அன்பர்களிடம் இந்நோய் தாக்கவில்லை.
காரணம் இவ் அன்பர்கள் திருநீறு நித்தலும் பூசுவர்..
திருநீறு பசுமாட்டின் சாணத்தால் தயாரிக்கப்படுகிறது..
பசுமாட்டின் சாணம் நோய் கிருமியை எதிர்க்கும் சக்தி உள்ளது..
அதனால்தான் நம் இல்ல விழாக்காலங்களில் வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவு கோலம் போடுகிறோம் ..
இப்படிபட்ட திருநீறு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.
ஆக அன்பர்களே திருநீற்றினை நிறைய பூசும் அன்பர்களுக்கு எந்த வித வியாதிகளும் வராது என்று அடியேனின் கருத்து..
திருநீற்றினை நித்தலும் நமசிவாய என்று நிறைய பூசுவீர்..
வினையை விரட்டுவீர்..
தொண்டீசன். . ஈரோடு. .
No comments