கனவுகளை கலைத்த கஜா
கனவுகளை கலைத்த கஜா
குடும்பத்தை உயர்த்தி பிடித்து வாழவைத்த
குடும்பத்தின் தலை பிள்ளை
தென்னம்பிள்ளை போச்சடி புள்ள!
அந்தி மாலை நேரத்தில தோப்புக்கு சென்று
ஓங்கி உயர்ந்து நின்ற குடும்மத்தின் மூத்த பிள்ளை
அழகை பார்த்து வீடு திரும்பினேன் புள்ள!.
விடியும் காலை பொழுதுகுள்ள,
கஜா என்னும் பெயர் சூடி வந்த புயல்,
ஆடிய ஆட்டத்தில குடும்பத்தின் மூத்த பிள்ளை
தென்னம்பிள்ளை,நிலைகுலைந்து,
புவி மேலே புரண்டு கெடக்குது புள்ள.
தார் சுமந்த வாழை, காய் கனிகளை சுமந்த
மா, பலா மரங்களும் கட்டுக்கடங்காத
காற்றில் சிக்கி சிதைந்து கிடைக்குது புள்ள!.
வைகறையில் துயிலெழுந்து வண்ண வண்ண
சிறகை விரித்து, சின்ன சின்ன குரலினால்
சிங்காரமாய் ஒலியெழுப்பி இரை தேடி உண்டு,
சின்ன சின்ன கால்களினால் சிறுக சிறுக சேகரித்த
கோல்களை எல்லாம் ஒன்றாக்கி கோபுரம்போல்
மரக்கிளையில் கூடமைத்து, மனிதகுலம் வியந்திட
வாழ்த்த பறவைகலெல்லாம், புயல் கொண்ட சினத்தினால்
அறுத்து வைத்த புல்லைத் தின்று
ஒன்றும் அறியாமல் தொழுவத்தில் உறங்கச் சென்ற
நேரத்திலே ஆடுகளும், மாடுகளும்
புயல் கொண்ட சினத்தினால், சிக்கி மரணத்தை தழுவியது புள்ள!
கடந்த காலங்களில் பருவமழை பொய்த்து
காவிரி வரண்டபோது, டெல்டா உழவர் குடி உடன்பிறப்புகள்
தன் உடமைகளை இழந்து வறுமையில் வாடியது புள்ள!.
இந்த ஆண்டு பருவமழை வரவேற்று உழவு செய்து
கனவுகளை சுமந்த, டெல்டா உடன் பிறப்புகளின்
கனவுகளை கஜா புயல் கலைத்ததடி புள்ள!.
No comments