இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம்
# உடல் இளைக்க சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், செவ்வியம், சித்தரத்தை, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். அரிசியை வறுத்து தூள் செய்து ஏற்கெனவே தூள் செய்த பொடியுடன் சேர்த்து சாப்பிட்டு வர உடம்பு துரும்பாக இளைத்துப்போகும்.
# கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றுப்புண்ணையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப்பழம். தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும்.
# கரிசலாங்கண்ணி வேர் கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் தேங்கும் கழிவு நீர்களை வெளியேற்ற உதவுகிறது.
# மரிக்கொழுந்து இலையும் நில ஆவார இலையும் சம அளவு அரைத்து தலைக்கு தடவி வர செம்பட்டை முடி கருமையாகும்.
# நல்லெண்ணெயில் சுண்ட வத்தலை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 1 கரண்டி சுடு சோற்றில் 2 உருண்டை சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும்.
# பன நுங்கை மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
# மந்தாரை இலையுடன் கொத்தமல்லி, இஞ்சி, உளுந்து, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட்டு வர வாந்தி நிற்கும்.
# அரசமரக்கொழுந்து, ஆலமரக்கொழுந்து, அத்திமரக்கொழுந்து மூன்றையும் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட இரத்த மலப்போக்கு நிற்கும்.
# விளாம்பழம் தொடர்ந்து சாப்பிட கல்லீரல் நோய் குணமாகும்.
# வெள்ளரிப்பிஞ்சு இருதய நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.
# பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் ஒட்டி வைத்தால் வலி குணமாகும்.
# இரவில் தலையணையில் செம்பருத்தி இலைகளை வைத்து படுத்து வந்தால் தலைப்பேன்கள் ஒழியும்.
# திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனுடன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். மூல நோய்க்கு துத்திக்காய் மிகவும் நல்லது.
# இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
No comments